பிறந்தநாள் பலன்கள்

2,11,20,29


17.11.2019 முதல் 23.11.2019 வரை


குடும்பத்தின் மீது அதிக பற்றும் பாசமும் கொண்டுள்ள இரண்டாம் எண் அன்பர்களே இந்த வாரம் பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும், காரிய தாமதமும் உண்டாகும்.  புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெண்களுக்கு எந்த சூழ்நிலையிலும் நிதானமாக யோசித்து எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். கலைத்துறையினர் பயணம் செல்ல நேரலாம். அரசியல்துறையினருக்கு நீண்ட நாள் முயற்சிகள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபட்டு படிப்பீர்கள். கல்வி தொடர்பான பயணங்கள் ஏற்படும்.

பரிகாரம்: சிவன் கோவிலுக்குச் சென்று வில்வமாலை அணிவித்து பூஜை செய்யுங்கள். நோய்கள் தீரும்.