பிறந்தநாள் பலன்கள்

1,10,19,28


7.11.2019 முதல் 23.11.2019 வரை


மனசாட்சிக்கு பயந்து நடக்கும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த வாரம் உடல் அசதி ஏற்படலாம். மனதில் ஏதாவது கவலை  இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சனைகள் நல்ல முடிவை தரும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பதைகண்டு மனம் மகிழ்வீர்கள். வழக்குகள் இழுபறியாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் எதிர்பார்த்தபடி  இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் ஏற்படுவதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். பெண்களுக்கு: எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்ற மடைய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: அம்மனுக்கு மல்லிகை மலரை கொடுத்து வர மன பயம் நீங்கும்.